பிஎஸ்பிபி பள்ளி பாலியல் சர்ச்சை: குவியும் புகார் - விசாரணையில் திடுக் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் சர்ச்சை: குவியும் புகார் - விசாரணையில் திடுக் தகவல்!

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் சர்ச்சை: குவியும் புகார் - விசாரணையில் திடுக் தகவல்!


சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்ததாக பள்ளியின் முன்னாள் மாணவி புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள புழல் சிறையில் ஆசிரியர் ராஜகோபாலன் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய நடத்திய விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

மாணவிகளின் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும்,

பாலியல் புகார் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை நீக்கியதாகவும் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, புகார் தெரிவிக்க விரும்பும் மாணவிகள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர். காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

அதேசமயம், பள்ளி ஆசிரியர் ராஜகோபால், பள்ளி முதல்வர், நிர்வாகி, புகாரை பொதுவெளியில் பதிவிட்ட பெண், சென்னை மாவட்ட CEO ஆகியோர் ஜூன் 4ஆம் தேதி நேரில் ஆஜராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad