அதி தீவிர புயலாக மாறிய யாஸ்.. எப்போது கரையை கடக்கும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

அதி தீவிர புயலாக மாறிய யாஸ்.. எப்போது கரையை கடக்கும்?

அதி தீவிர புயலாக மாறிய யாஸ்.. எப்போது கரையை கடக்கும்?



யாஸ் புயல் இன்று மாலை அதி தீவிர புயலாக உருமாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் எம்.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். மேலும், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மொஹபத்ரா, “வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ளது. இந்தப் புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒடிசா கடலோரத்தில் உள்ள தம்ரா துறைமுகம் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்புயல் ஒடிசா - மேற்கு வங்க கடற்கரைகளில் பாரதீப், சாகர் தீவுகளுக்கு இடையே தம்ரா துறைமுகத்துக்கு வடக்கு திசையில், பாலசோருக்கு தென் திசையில் நாளை மதியம் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக உணவு மற்றும் இதர வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad