நுரையீரல் சளி நீங்க ஒரு சூப்பர் மருந்து
கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
வேறுருடன் இருக்கும் கரிசலாங்கண்ணி கீரை – ஒன்று
நெய் – தேவையான அளவு
மிளகு தூள் – சிறிதளவு
நுரையீரல் பிரச்சனைக்கு மருந்து – கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து செய்முறை:
வேருடன் உள்ள கரிசலாங்கண்ணி இலையை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, மைபோல் நான்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அவற்றில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி பேஸ்ட் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மெழுகு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, பதப்படுத்தி வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு இந்த கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்யும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் தயார் செய்ய வேண்டும்.
நுரையீரல் சளி நீங்க – கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து பயன்படுத்தும் முறை:
இந்த இயற்கை மருந்தை அதிகாலை எழுந்து, பல் துலக்கிவிட்டு, தங்களது வலது கை பெருவிரலால் இந்த மருந்தை தொட்டு எடுத்து கொள்ளவும்.
பின்பு தங்களது வாயை நன்றாக திறந்து, உள்நாக்கில் உள்ள மேல் துவாரத்தில் இந்த மருந்தை வைக்க வேண்டும்.
பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், இவ்வாறு காத்திருக்கையில் சூஷ்ம நாடிகளுக்குள் உறைந்திருக்கும் சளி அனைத்தும் நூல்நூலாக வெளியேறும்.
இந்த முறையை தொடர்ந்து 45 நாட்கள் வரை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் செய்துவர நுரையீரலில் சளி (lung problems) அனைத்தும் வெளியேறிவிடும்.
No comments:
Post a Comment