ஆன்மிகம் விரதங்களும் பலன்களும் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 13, 2021

ஆன்மிகம் விரதங்களும் பலன்களும்

ஆன்மிகம் விரதங்களும் பலன்களும்


சோமவார விரதம்:
சோமவார விரதம்
நாள் : கார்த்திகை மாத திங்கள் கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
சோமவார விரதம் இருக்கும் முறை: சோமவார விரதம் இருப்பவர்கள் இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை முடியாதவர்கள் மட்டும் காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.
சோமவார விரதம் பலன்கள்: திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வழிபாடு: கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிவாலயம் சென்று வந்தால் நல்லது.

பிரதோஷ விரதம்:
பிரதோஷ விரதம்

 
நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
பிரதோஷ விரதம் இருக்கும் முறை: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகல் நேரங்களில் எதையும் உண்ணுதல் கூடாது. மாலை 04:30 மணி அளவில் தலை நீராடி சிவாலயம் சென்று சிவனை வழிபட்டு, பிரதோஷ நேரம் முடிந்ததும் சிவன் அடியார்களுடன் சேர்ந்து உன்ன வேண்டும்.
பிரதோஷ விரதம் பலன்கள்: கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை முற்றிலும் நீங்கும். செய்த பாவம் அனைத்தும் நீங்கும்.
செய்யக்கூடாதவை: பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கும் நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், எண்ணெய் தேய்த்தல்,  பயணம் செய்தல், மந்திர ஜபம் செய்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்:
சித்ரா பவுர்ணமி விரதம்
நாள்: சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம்: சித்திரகுப்தர்
சித்ரா பவுர்ணமி விரதம் இருக்கும் முறை: சித்ரா பவுர்ணமி விரதத்தில் இரவில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சித்ரா பவுர்ணமி விரதம் பலன்கள்: மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.


 
தை அமாவாசை விரதம்:
தை அமாவாசை விரதம்
நாள்: தை அமாவாசை
தெய்வம்: சிவபெருமான்
தை அமாவாசை விரதம் இருக்கும் முறை: காலையில் உணவு சாப்பிடாமல் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல்.
தை அமாவாசை விரதம் பலன்கள்: முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி.
வழிபாடு: பிற அமாவாசைகளில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம்:
நாள்: ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்.
தெய்வம்: சுப்பிரமணியர்
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை: முதல் 5 நாட்கள் வரையிலும் ஒரு வேலை மட்டும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசி நாள் முழுமையாக பட்டினி கிடந்து, சூரசம்ஹாரம் முடிந்த பிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பிறகு, மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை அருந்தி வரலாம்.
கந்த சஷ்டி விரதம் பலன்கள்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad