அஸ்வகந்தா பயன்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

அஸ்வகந்தா பயன்கள்

அஸ்வகந்தா  பயன்கள்

வணக்கம் நண்பர்களே..! மூலிகை செடிகளில் சிறந்து விளங்கக்கூடிய அஸ்வகந்தா பற்றிய சில நன்மைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம். “அஸ்வம்” என்றால் வடமொழியில் குதிரை என்று பொருள். “கந்தம்” என்றால் கிழங்கு என்பது பொருளாகும். அஸ்வகந்தாவின் இலையினை முகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசம் அடிப்பது போன்று இருப்பதால் அஸ்வகந்தா என்று வடமொழியில் அழைக்கிறார்கள். அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி என்ற பல பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை நீண்ட நாள் வரையிலும் சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்ல பலன் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே இப்போது சிறந்த மூலிகை நிவாரணமான அஸ்வகந்தாவை சாப்பிடுவதால் என்னென்ன நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்பதை பற்றி படித்தறியலாம்.

தூக்கமின்மையை தடுக்கும்:
Ashwagandha Uses in Tamilஅஸ்வகந்தா மூலிகையானது மன அழுத்த–த்தினை குறைக்கும். அஸ்வகந்தாவில் அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளதால் மன சோர்வினை குறைத்துவிடும். அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தினை குறைத்து இரவில் நிம்மதியான உறக்கத்தினை கொடுக்கிறது.

நீரிழிவு நோயை குணமாக்கும்:
Ashwagandha Uses in Tamil
இன்றைய காலக்கட்டங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகமாக உள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பியானது அதிகரிக்க அஸ்வகந்தா கிழங்கு பயன்படுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், உடல்நிலை சீராக இருப்பவர்களுக்கும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை சீராக வைத்திருக்க இந்த அஸ்வகந்தா மூலிகை உதவியாக உள்ளது.

இந்த அஸ்வகந்தாவினை உடலில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், சர்க்கரை நோய் அற்றவர்கள் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக மருத்துவரிடம் அணுகி கேட்பது நல்லது.

பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டு பிரச்சனையை சரி செய்யும்:
Ashwagandha Uses in Tamil30 வயதினை கடந்துவிட்டாலே அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்றுதான் இந்த மூட்டுவலி பிரச்சனை. மூட்டு பகுதியில் வீக்கம், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் அஸ்வகந்தாவினை பயன்படுத்தி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்:
Ashwagandha Uses in Tamil“மைடேக் காளான் சாறு”(இது ஒருவகை ஆசியாவில் பயன்படுத்தப்படும் சமையல் காளான்) அஸ்வகந்தா மூலிகையுடன் சேர்த்து சாப்பிட்டு வர நமக்கு உண்டாகும் நோய் தொற்று அபாயத்திலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad