அம்மா கவிதைகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 5, 2021

அம்மா கவிதைகள்

அம்மா கவிதைகள் 


ஒவ்வொரு நாளும்
கவலைபடுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை படமாட்டாள்
(அம்மா)

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!

No comments:

Post a Comment

Post Top Ad