விவசாயிகளிடம் இருந்து கூடுதல் பால் கொள்முதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

விவசாயிகளிடம் இருந்து கூடுதல் பால் கொள்முதல்!

விவசாயிகளிடம் இருந்து கூடுதல் பால் கொள்முதல்!திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் ஆவின் கொள்முதல் நிலையங்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களின் தரம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று சங்கிலியை முறியடிக்க தமிழக முதல்வர் உறங்காமல் பணியாற்றி வருவதாகவும் பால் விலை குறைக்கப்பட்டதையடுத்து அனைத்து பகுதிகளிலும் அவை முறையாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு காலமென்பதால் விவசாயிகள் தனியாருக்கு வழங்கிவந்த பாலையும் ஆவின் நிலையங்களில் வழங்கி வருவதாகவும், அவர்கள் பாதிக்காத வகையில் கூடுதலாக இரண்டு லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை பதப்படுத்தி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

தமிழக அரசின் புதிய விலைக்கு பால் விற்பனை செய்யப்படாத 11 விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad