அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு

அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு


Business ideas tamil language:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் அதிகம் டிமாண்டில் உள்ள சிறந்த சுயதொழில் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது அனைத்து விசேஷங்களுக்கும் அதிகம் பயன்படுத்த கூடிய டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு பற்றி இங்கு நாம் படித்தறிவோம். இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை மக்களிடம் அதிகம் வரவேற்கப்படுகிறது அதாவது ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி அந்த நாளில் உணவு பரிமாறும் போது டைனிங் டேபிளில் பேப்பர் ரோல் விரித்து உணவுகளை பரிமாறுகின்றன. டைனிங் டேபிளில் இந்த பேப்பரினை விரித்து உணவுகளை பரிமாறிவதினால் தூய்மையாகவும், உணவருந்திய பிறகு டேபிளினை சுத்தம் செய்யும் வேலை குறைக்கப்படுகிறது என்பதற்க்காக இப்பொழுது அனைத்து விசேஷங்களுக்கும் இந்த டைனிங் பேப்பர் ரோலினை 95% மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே இது வர யாரும் அதிகம் செய்யாத தொழில் என்பதால், புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயரிப்பு தொழிலை செய்து இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:-
பெரிய அளவில் பேப்பர் ரோல் (paper roll), Dining table paper roll making machine, Ink போன்றவை மூலப்பொருட்களாக தேவைப்படும்.

பேப்பர் ரோல் தயாரிப்பு இயந்திரம்:-
Dining table paper roll making machine
Dining table paper roll making machine விலை 2,00,000/- ரூபாயில் இருந்து அனைத்து ஆன்லைன் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே மிக எளிதில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம்.

பேப்பர் ரோல் தயாரிக்கும் முறை:-
Dining table paper roll

 
பேப்பர் ரோலினை எம்டியாக விற்பனை செய்வதற்கு பதில் ஏதேனும் டிசைன் செய்து விற்பனை செய்தால் மக்களிடம் அதிக வரவேற்பை பெறலாம். எனவே பேப்பர் ரோல் மற்றும் Ink இவை இரண்டியும் Dining table paper roll making machine-யில் செட் செய்து இயந்திரத்தை இயக்கினால் பேப்பர் ரோலில் டிசைன்கள் பதியப்பட்டு பேப்பர் ரோல் ஆகும். இதனை விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:-
இந்த டைனிங் டேபிள் பேப்பர் ரோலினை அனைத்து வகை விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதால், சந்தையில் இதன் தேவை அதிகம் வரவேற்கப்படுகிறது. சிறிய மளிகை கடையில் இருந்து அனைத்து வகை டிபார்மண்ட் ஸ்டோரிலும் இந்த பேப்பர் ரோலினை விற்பனை செய்யலாம்.

தயாரிப்பு செலவு:-
பேப்பர் ரோல் தயார் செய்ய 500 கிலோ பேப்பர் ரோல் வாங்க வேண்டியதாக இருக்கும், இந்த பேப்பர் ரோல் தரத்தை பொறுத்து 1 கிலோ ரூபாய் 25 முதல் 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய மின்சார செலவு 5 ரூபாய் ஆகும் என்று வைத்து கொள்வோம். எனவே ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயார் செய்ய ஆகும் செலவு 30 ரூபாய் ஆகும். இதனை சந்தையில் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கிலோ டைனிங் டேபிள் பேப்பர் ரோலில் இருந்து 20 ரூபாய் இலாபம் பெறலாம். ஒரு நாளிற்கு 50 கிலோ வரை தயார் செய்து விற்பனை செய்தால் 1000 ரூபாய் வரை இலாபம் பெறலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad