15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்

15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்


முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு பொருள் கூட. சமையலில் முட்டையை பயன்படுத்தி ஏராளமான உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மொறு மொறு முட்டை பிங்கர்ஸ் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இங்கு தெளிவாக படித்தறிவோம் வாங்க. Egg recipes மிகவும் சுவையாகவும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையில் இருக்கும்.

முட்டை பிங்கர்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள்:

முட்டை – 5
மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – 1/4 ஸ்பூன்
மசாலா தயார் செய்வதற்கு:-

மைதா – 1/4 கப்
கான்பிளவர் – 1/4 கப்
Red chilli flakes – 1/4 ஸ்பூன்
Italian seasoning – 1 ஸ்பூன்
பிரட் துகள்கள் – சிறிதளவு
முட்டை – 2
எண்ணெய் – தேவையான அளவு
முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் 5 முட்டையை உடைத்து ஊற்றி நுரை வரும் அளவிற்கு நன்றாக அடித்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகு தூள் மற்றும் 1/4 ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 2
பிறகு இன்னொரு பவுலை எடுத்து கொள்ளுங்கள், அந்த பவுலின் உள்பகுதியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 
முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 3
பின் கலந்து வைத்துள்ள முட்டை கலவையினை, எண்ணெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.


பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றுங்கள், பின் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு ஸ்டாண்டை அதனுள் வைக்க வேண்டும்.


 
முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 4

பின் அந்த ஸ்டாண்டின் மீது கலந்து வைத்துள்ள முட்டை கலவையினை அப்டியே மூடிபோட்டு உள்ளே வைக்க வேண்டும்.
பிறகு கடாயை நன்றாக முடி போட்டு 20 நிமிடங்கள் கலவையை நன்றாக வேகவைக்க வேண்டும்.


 
முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 5

பிறகு முட்டை கலவையை நன்கு வெந்ததும் கடாயில் இருந்து தனியாக எடுத்து. நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொல்லுங்கள். மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 6
பின்பு ஒரு பவுலில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்து கொள்ளுங்கள். அதேபோல் இன்னொரு பவுலில் பிரட் துகள்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பின் ஒரு பவுலில் 1/4 கப் மைதா மாவு, 1/4 கப் கான்பிளவர் மாவு, Red chilli flakes 1/2 ஸ்பூன், Italian seasoning ஒரு ஸ்பூன் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 6
இப்பொழுது கட் செய்து வைத்துள்ள முட்டை துண்டுகளை முதலில் கலந்து வைத்துள்ள மாவில் நன்றாக பிரட்டி கொள்ளுங்கள், பின் முட்டையில் நன்கு நனைத்து எடுத்து கொள்ளுங்கள், பிறகு பிரட் துகள்களில் நன்கு பிரட்டி எடுக்க வேண்டும். பின் திரும்பவும் முட்டையில் நனைத்து, திரும்பவும் பிரட் துகள்களில் பிரட்ட வேண்டும்.


இவ்வாறு அனைத்து முட்டை துண்டுகளையும் நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

முட்டை பிங்கர்ஸ் செய்முறை – Egg recipes in tamil step: 7
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில், தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நன்றாக சூடு படுத்தவும்.

எண்ணெய் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பிரட்டி வைத்துள்ள முட்டை பிங்கர்ஸை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான முட்டை பிங்கர்ஸ் தயார் இதனை Tomato ketchup-வுடன் தொட்டு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

குழந்தைகள் இந்த முட்டை பிங்கர்ஸ்-ஐ மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி.

No comments:

Post a Comment

Post Top Ad