மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 25, 2021

மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்


பொதுவாக மூச்சு பிடிப்பு ஏற்படும் போது யாராலும் சரியாக மூச்சுவிட முடியாது அதிகளவு அவஸ்த்தைகளையும், கஷ்டத்தை கொடுக்கும். மூச்சுவிட முயற்சி செய்தாலும் அதிகளவு வலி ஏற்படும். இதன் காரணமாகவே மூச்சு பிடிப்பு ஏற்படும் போது அனைவருமே மூச்சை மெதுவாக விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். பொதுவாக ஒருவருக்கு இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது அவை என்னென்ன? இந்த மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

மூச்சு பிடிப்பு காரணம்:

பெரும்பாலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதன் மூலமாக இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. அதேபோல் அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவருக்கு இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. சளி, ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படலாம். அதேபோல் சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். சரி இந்த மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் பற்றி கீழே படித்தறியலாமா?

சில நேரங்களிலில் திடீரென முதுகு பகுதியில் பிடித்துக்கொண்டு அதிகளவு வலியை ஏற்படுத்தும். சரியாக மூச்சுவிட முடியாது இதனை தசைப்பிடிப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய மஞ்சள் கடுகு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. அதாவது தசைப்பிடிப்பிற்கு காரணமான தசைநரம்புகளைத் தளர செய்கிறது. எனவே இது போன்ற திடீரென முதுகு பகுதியில் தசைப்பிடித்து கொண்டால் 1 டீ ஸ்பூன் மஞ்சள் கடுகை எடுத்து சாப்பிட்டு வாருங்கள் நல்ல ரிலீவ் கிடைக்கும்.

மூச்சு பிடிப்பு நீங்க வைத்தியம்:

சுக்கு, பெருங்காயம், சாம்பிராணி, சூடம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொள்ளுங்கள். பின் இவற்றை வடித்த கஞ்சியில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த கஞ்சியை சுடவைத்து வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

மூச்சு பிடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்:


 
சளி, ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு பிடிப்பு ஏற்படுகின்றது என்றால் தினமும் காலை வேளையில் ஒரு கற்பூரவள்ளி இலையினை நன்கு மென்று சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவதினால் நுரையீரல் நன்கு செயல்படும். மூச்சு பிடிப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

மூச்சு பிடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்:

Vayu Pidippu Remedy in Tamil – முறையற்ற உணவு முறையினால் சிலருக்கு வாயுத் தொல்லை அதிகளவு இருக்கும். இந்த வாய்வு தொல்லை காரணமாக சிலருக்கு மூச்சு நன்றாக பிடித்து கொள்ளும். வாய்வு காரணமாக மூச்சு பிடித்து கொண்டால் கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அதுவும் நீங்கும்.

Moochu Pidippu Vaithiyam – சுடுநீர் ஒத்தடம்:-

பாதிக்கப்பட்ட இடத்தில் 72 மணி நேரத்தில் வெந்நீர் ஒத்தடம் தருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதினால் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை நீட்டிக்கவும் குறைக்கவும் உதவி செய்கின்றது. ஆகவே ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் துண்டை நனைத்து பிழிந்து கொள்ளுங்கள், பின் மிதமான சூட்டில் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த துண்டை வைத்து 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.


 
மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம் – எப்சன் உப்பு:-

பொதுவாக நமது உடலில் மக்னீசியத்தின் அளவு குறையும் போது தசைப்பிடிப்பு பிரச்சனையானது அதிகரிக்கும். எனவே எப்சம் உப்பு இந்த பிரச்சனையை சரி செய்ய பயன்படுகிறது. எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் தசைகளை ரிலாக்ஸ் செய்ய பயன்படுகிறது. ஆனால் இதை 48 மணி நேரங்கள் கழித்தே செய்ய வேண்டும். ஒரு குளியல் டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளுங்கள் அதில் 1-2 கப் எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பிறகு 20 நிமிடங்கள் வரை இந்த நீரில் குளிக்கவும். இவ்வாறு குளிக்கும் போது தசைப்பிடிப்புகளினால் ஏற்பட்ட வலிகள் அனைத்தும் பறந்தோடும்.

No comments:

Post a Comment

Post Top Ad