அண்ணா பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 1, 2021

அண்ணா பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம்

அண்ணா பல்கலைக்கு புதிய பதிவாளர் நியமனம்


அண்ணா பல்கலையின் புதிய பதிவாளராக, கட்டட அமைப்பியல் கல்லுாரி முதல்வர் ராணி மரிய லியோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம், ஏப்ரல், 11ல் முடிந்தது. அதனால், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு, பல்கலை நிர்வாகத்தை கவனித்து வருகிறது.சுரப்பா துணைவேந்தராக இருந்தபோது பதிவாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கருணாமூர்த்தி, நாளை ஓய்வு பெறுகிறார். அதனால், புதிய பதிவாளர் நியமிக்கப் பட்டுள்ளார்.

இது குறித்து, நிர்வாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், உயர்கல்வி முதன்மை செயலருமான அபூர்வா பிறப்பித்த உத்தரவு:அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி ஓய்வு பெறுவதால், அந்த இடத்திற்கு, அண்ணா பல்கலையின் பேராசிரியை ராணி மரிய லியோனி வேதமுத்து, பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்படுகிறார். இவர், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கட்டட அமைப்பியல் கல்லுாரியான ஆர்கிடெக் கல்லுாரியின் முதல்வராக உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad