கொரோனாவை குணப்படுத்தும் இலவச மருந்து: குவியும் கூட்டம்!
கொரோனாவை முற்றிலும் குணப்படுத்து மருந்து என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தடுப்பூசி மட்டுமே அதிலிருந்து தப்பிக்க தீர்வு என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. அதுதவிர சித்தா, ஆயுர்வேத மருந்துகளையும் பொது மக்கள் எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது ஆங்கில மருத்துவமான தடுப்பூசி மட்டுமே.
இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வழங்கப்படும் ஆயுர்வேத மருந்தால் கொரோனா குணமாகும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் அலை மோதி வருகிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்போரிகி ஆனந்தயா. ஆயுர்வேத மருத்துவரான இவர், தன்னிடம் உள்ள மருந்து கொரோனாவை தடுப்பதோடு பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் என்றும் அறிவித்தார்.
மேலும் அந்த மருந்தை தான் இலவசமாக வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருந்து அந்த மருந்தை பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட அதிகாரிகள் அந்த மருந்தின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். அத்துடன், மருந்து விநியோகமும் நிறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment