கண்ணீர் விட்டு அழுத பிரதமர் மோடி!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பாதிப்புகள் பதிவாகி வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கருப்பு பூஞ்சை தொற்றும் இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா 2ஆவது அலை தொடர்பாக வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்களுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என நெகிழ்ச்சியாக கூறும்போது கண்கலங்கி விட்டார்.
கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற பிரதமர் மோடி, மக்களுக்காக சேவை செய்யும் நமது முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை கொரோனா
தடுப்பூசி வழங்கியுள்ளது. வரும் நாட்களில், அனைவருக்கும் தடுப்பூசி பாதுகாப்பை விரிவுப்படுத்துவோம் என்றார்.
குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்று புதிய சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment