பாஜகவுக்கு பறக்கும் ராஜேந்திர பாலாஜி? மோடியின் மகனுக்கு இப்படியொரு ஸ்கெட்ச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

பாஜகவுக்கு பறக்கும் ராஜேந்திர பாலாஜி? மோடியின் மகனுக்கு இப்படியொரு ஸ்கெட்ச்!

பாஜகவுக்கு பறக்கும் ராஜேந்திர பாலாஜி? மோடியின் மகனுக்கு இப்படியொரு ஸ்கெட்ச்!



தேர்தல் தோல்வி, ஊழல் குற்றச்சாட்டுகள் என நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ராஜேந்திர பாலாஜி தன்னை காப்பாற்றிக் கொள்ள எடுத்துள்ள முடிவுதான் இது என்கிறார்கள்.

பாஜக தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத சூழலில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை ஆட்டிப்படைத்து தமிழகத்தை மறைமுகமாக பாஜகவே ஆட்சி செய்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. நான்காண்டு காலமாக பாஜக ஆளும் மாநிலத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் தனது கட்சியை உடனடியாக எப்படி வலுப்படுத்தியதோ அதேபோல் தமிழகத்திலும் அதை செய்து பார்க்க அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கிறது பாஜக. மோடி பிரதமரானதற்கு பின்னர் பாஜக தான் கால்பதிக்காத மாநிலத்திலெல்லாம் கூட கடை விரித்து அங்குள்ள பிரதான கட்சிகளுக்கு நிகராக வளர்ந்துள்ளது.

எம்.எல்.ஏக்களை கவர்ந்து வந்து ஆளும் கட்சிகளை ஆட்டம் காண வைப்பது, செல்வாக்குள்ள நபர்களை பிற கட்சிகளிலிருந்து தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது என பாஜகவின் கடந்த ஆறரை ஆண்டு கால அரசியலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 2011 மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3 இடங்களில் வெற்றி பெறுகிறது. இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பின்பு 2021 தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக வலம் வந்த சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பல நிர்வாகிகளை ஆசை வார்த்தைகள் கூறியோ, வழக்குகளை காட்டி மிரட்டியோ பாஜக பக்கம் கொண்டு வந்தார்கள். இதே திட்டம் தான் தமிழகத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதில் பாஜகவின் முழு ஸ்கெட்சும் இப்போது அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் தலைமையான அதிமுகவுக்குத் தான்.

அதிமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டு காலம் அமைச்சராக பதவி வகித்த பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது பற்றிய தகவல்களை திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே எடுத்துவிட்டது. தற்போது ஆட்சியிலிருக்கும் நிலையில் மாஜி அமைச்சர்களுக்கு எதிரான கைது படலம் தொடங்க உள்ளதாக கூறுகின்றனர். இந்த ஹிட் லிஸ்டில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இது அவருக்கும் தெரியாமல் இல்லை.

அமைச்சராக இருந்த போது மோடி எங்கள் டாடி என்றவர், பாஜகவை மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸையும் புகழ்ந்து பேசியவர், பாஜகவின் அரசியல் அஜெண்டாவுக்கு ஏற்ப பேசி வந்தவர், தற்போது மத்திய அரசின் உதவியை மிகவும் நாடுபவர் என அத்தனை பொருத்தங்களும் பக்காவாக இருப்பதால் ராஜேந்திர பாலாஜியை தட்டி தூக்கும் வேலையை செய்துவருகிறது பாஜக என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

ஏற்கெனவே நயினார் நாகேந்திரனை எதிர்கட்சித் தலைவராக நியமித்து அதிமுக எம்எல்ஏக்களை பாஜக பக்கம் நகர்த்தி வரும்படி அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதாக ஒரு வாரத்துக்கு முன்பாகவே தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது அதில் முன்னாள் அமைச்சரே சிக்கியிருப்பதால், இனி இதுபோன்ற ‘கவர்ந்திழுக்கும்’ செய்திகள் அதிகம் வரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad