மக்கள் நடமாட்டத்திற்கு மொத்தமா தடை; தமிழக அரசு அடுத்தகட்ட அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

மக்கள் நடமாட்டத்திற்கு மொத்தமா தடை; தமிழக அரசு அடுத்தகட்ட அதிரடி!

மக்கள் நடமாட்டத்திற்கு மொத்தமா தடை; தமிழக அரசு அடுத்தகட்ட அதிரடி!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. வரும் 24ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், இதனை மேலும் நீட்டிப்பது குறித்து அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து முக்கிய அறிவுப்புகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பிற துறை அலுவலகங்கள் எதுவும் செயல்படவில்லை. கடந்த ஆண்டு கோவிட்-19 முதல் அலையின் போது அரசு அலுவலகங்களுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போது இல்லை. எனவே ஊரடங்கு முடிந்து அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக பொதுமக்கள் வருகை புரிவர். இவர்கள் கூடவே கொரோனாவையும் அழைத்து வர நேரிடும். இதன் காரணமாக கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை போன்ற அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் பொதுமக்கள் மற்றும் வெளியாட்கள் வருவர். இவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது. எனவே தடுப்பூசி ஆதாரம் வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தலாம். அதாவது கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்று அல்லது


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்கலாம். இதன்மூலம் பொதுமக்களின் வருகையை கட்டுப்படுத்தலாம். கொரோனாவும் தடுக்கப்படும். இல்லையெனில் அடுத்த சில மாதங்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கலாம். ஆன்லைன் வாயிலாக குறைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

இதுபற்றி அலுவலர் சங்கங்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். அடுத்தகட்டமாக உயர் அதிகாரிகள் வாயிலாக அரசுக்கு எடுத்துரைக்க உள்ளோம் என்று கூறினர். எனவே தமிழக அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகைக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad