விமானத்தில் மணப் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை: மதுரை ஜோடி வைரல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

விமானத்தில் மணப் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை: மதுரை ஜோடி வைரல்!

விமானத்தில் மணப் பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை: மதுரை ஜோடி வைரல்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், நாளை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக மருத்துவ அவசரம், இறப்பு, திருமண நிகழ்வுகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டதிற்குள் பயணிக்க இபதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், தளர்வுகளற்ற ஊரடங்கில் உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபதிவுடன் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபதிவு தேவையில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, சில திருமண நிகழ்வுகள் அவசர அவசரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு எதிரொலியாக விமானத்திலேயே மணப் பெண்ணுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

மதுரையை சேர்ந்த ராகேஷ் - தீக்‌ஷனா தம்பதியினர் தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் பயணித்த அந்த ஜோடியுடன் அவர்களது உறவினர்களும் வந்துள்ளனர். விமான பயணம் என்பதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது உறவினர்கள் முன்பு மணப்பெண்ண்ணுக்கு மணமகன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்று கொண்டனர். பறக்கும் விமானத்தில் மதுரை ஜோடி தாலி கட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், மணமக்கள் இருவர் உள்பட அங்கிருந்தவர்கள் சிலர் மாஸ்க் அணியாமலும், சரீர விலகலை பின்பற்றாமலும் இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad