தமிழக பள்ளி மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு.!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 10, 2021

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு.!!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகம் பாட காணொளிகள் கல்வி தொலைக்காட்சியில் 11 ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 


ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பையும் இன்று காலை வெளியிட்டுள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் பாடங்களை பயில வேண்டும் என்ற காரணத்திற்காக பயிற்சி புத்தக பாட காணொளிகள் வரும் 11ம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம் பாடங்கள் காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு 11ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை தினமும் இரண்டு காணொளிகள் வீதம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad