தாய்மார்கள் வரவேண்டாம் - கொரோனா கால பணியில் இருந்து விலக்கு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 10, 2021

தாய்மார்கள் வரவேண்டாம் - கொரோனா கால பணியில் இருந்து விலக்கு

தாய்மார்கள் வரவேண்டாம் - கொரோனா கால பணியில் இருந்து விலக்கு

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக நாளை முதல் முழு முடக்கம் அமலாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இதனிடையே, மதுரையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் சண்முகப்பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.HomeKalvinews
தாய்மார்கள் வரவேண்டாம் - கொரோனா கால பணியில் இருந்து விலக்கு
KalvinewsMay 09, 20210 Comments
Facebook
Twitter

 தாய்மார்கள் வரவேண்டாம் - கொரோனா கால பணியில் இருந்து விலக்கு 
சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனொரு பகுதியாக நாளை முதல் முழு முடக்கம் அமலாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இதனிடையே, மதுரையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் சண்முகப்பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு பணியிலிருந்து விலக்கு தர அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad