மதுக் கடைகளில் குவிந்த கூட்டம்; ஹேப்பி மூடில் தமிழக ’குடி’மகன்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

மதுக் கடைகளில் குவிந்த கூட்டம்; ஹேப்பி மூடில் தமிழக ’குடி’மகன்கள்!

மதுக் கடைகளில் குவிந்த கூட்டம்; ஹேப்பி மூடில் தமிழக ’குடி’மகன்கள்!


தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த ஒருவாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டும் இயங்கும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் நடமாடும் காய்கறி கடைகள் செயல்படும். மற்ற அனைத்து கடைகளும் அடுத்த ஒருவார காலத்திற்கு மூடியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று ஒருநாள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொண்டனர். ஆனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் தமிழக ’குடி’மகன்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இருப்பினும் கர்நாடக எல்லையோர மாவட்ட குடிமகன்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஏனெனில் கர்நாடக மாநிலத்தில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு மட்டும் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் இன்று காலை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால்


கர்நாடக எல்லையோரப் பகுதிகளான அத்திப்பள்ளி, ரிங்ரோடு ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அம்மாநில மதுக்கடைகளில் நேற்று அதிகாலையே குவிந்தனர். பல ஆயிரம் ரூபாய்க்கு ஒருவாரத்திற்கு தேவையான மதுபாட்டில்களை பெட்டிகளில் மொத்தமாக வாங்கிச் சென்றனர். ஒரேநேரத்தில் ஏராளமான

குடிமகன்கள் திரண்டதால்

சமூக இடைவெளி காணாமல் போனது. இதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக வாங்கிச் சென்ற மதுபாட்டில்களை சிலர் தங்கள் பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலர் தங்களது சுய தேவைக்காகவும் வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad