தமிழகத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: இன்னும் ஒருவர் மிஸ்ஸிங்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

தமிழகத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: இன்னும் ஒருவர் மிஸ்ஸிங்!

தமிழகத்தில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு: இன்னும் ஒருவர் மிஸ்ஸிங்!



தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்றார். அமைச்சரவையும் பதவியேற்றது.

அதன் பின்னர் மே 11ஆம் தேதி கலைவானர் அரங்கில் சட்டப் பேரவை கூடியது. அப்போது தற்காலிக சபாநாயகராக இருந்த கு.பிச்சாண்டி தலைமையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றனர்.

அன்றைய தினம் 10 எம்.எல்.ஏக்கள் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. திமுக சார்பில் 6 பேரும் அதிமுக சார்பில் 4 பேரும் பதவியேற்காமல் இருந்தனர்.

இவர்களில் 9 பேர் இன்று சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டனர். அதிமுக சார்பில் வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா ஆகியோரும், திமுக சார்பில் அமைச்சர் மதிவேந்தன், அமைச்சர் சிவசங்கர், வரலட்சுமி, காந்திராஜன், வெங்கடாசலம் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
திமுக எம்.எல்.ஏ சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad