ப்ளீஸ் எங்க அம்மா செல்போனை கொடுத்திடுங்க: கொரோனாவால் தாயை இழந்த சிறுமி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

ப்ளீஸ் எங்க அம்மா செல்போனை கொடுத்திடுங்க: கொரோனாவால் தாயை இழந்த சிறுமி!

ப்ளீஸ் எங்க அம்மா செல்போனை கொடுத்திடுங்க: கொரோனாவால் தாயை இழந்த சிறுமி!


கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் பலரும் தங்களது உறவுகளை இழந்து வாடி வருகின்றனர்.

அந்த வகையில், கர்நாடக மாநிலம் குஷால் நகரை சேர்ந்த தினக் கூலியான பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மடிகேரியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 16ஆம் தேதி உயிரிழந்து விட்டார். ஆனால், அவரது செல்போனை யாரோ ஒருவர் திருடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், கொரோனாவால் தனது தாயை இழந்துள்ள சிறுமி கிருதிஷ்கா தனது தாயின் செல்போனை எடுத்துச் சென்றவர்கள் அதனை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.அந்த செல்போனில் தனது தாயின் நினைவுகள் நிறைய உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தாயை இழந்த சிறுமி அவரது செல்போனை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ள இந்த சம்பவம் மனதை வருத்தமடைய செய்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அம்மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 32 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad