ஊரடங்கு நீட்டிப்பா முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

ஊரடங்கு நீட்டிப்பா முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பதில்!

ஊரடங்கு நீட்டிப்பா முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பதில்!


திருச்சி என்ஐடி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு வேறு எந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டு வருகிறோம். இதற்காக 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

சட்டமன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை கூடுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா, அப்படி நீட்டித்தால் என்னென்ன சலுகைகள் வழங்குவது, எவ்விதமான கட்டுப்பாடு விதிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவினருடனும் ஆலோசிக்கப்படும்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த புதிய சவாலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை ஏற்றுத் தமிழக மக்களின் உயிரைக் காக்கப் பணி செய்து வருகிறோம். தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரமாக உள்ளது. அண்டை மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50,000 என்ற நிலையில் உள்ளது.


ஊரடங்கு, தடுப்பு பணிகள், கட்டுப்பாடு போன்றவற்றால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும் வருங்காலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் அனைவரும் கொரோனா தொடர்பான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.

நமக்குக் கிடைத்த கொரோனா நிவாரண நிதியைக் கொண்டு 22 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களும், 25 கோடி ரூபாய் மூலம் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான கண்டெய்னர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.


கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் 9 பேருக்கு உள்ளது. இதற்கான மருந்து கைவசம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad