முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி ? முழு விவரங்கள்...
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்வோம்...
மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது என்ன ?
பொருளாதார வசதி இல்லாத ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவி களுக்கு தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் மூலமாக இலவசமாக தமிழக மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது .ஆதலால் முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது.
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்
வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டையின் நகல் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
எங்கே விண்ணப்பிப்பது ?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது .அங்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் இதன் பின்பு அலுவலகத்தில் அதிகாரி Acknowledgement Receipts தருவார்கள் பின் ஓரிரு நாட்களில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படிப் பெறுவது
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்.
மருத்துவ காப்பீட்டு அட்டை தொலைந்தால் என்ன செய்வது?
எதிர்பாராதவிதமாக நீங்கள் ஏற்கனவே எடுத்து காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது உடைந்து விட்டாலோ கவலை வேண்டாம் மிக எளிதாக காப்பீட்டு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக எடுக்கலாம் .முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து https://www.cmchistn.com உங்கள் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து search செய்தால் போதும் அதில் உங்கள் காப்பீட்டின் மற்றும் குடும்ப தலைவர் உறுப்பினர் பெயர்கள் இடம்பெறும். இதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்
மேலும் விபரங்களுக்கு
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணிநேர தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
WEBSITE
No comments:
Post a Comment