எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு: திமுகவுக்கு தாவும் நிலோபர் கபில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 24, 2021

எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு: திமுகவுக்கு தாவும் நிலோபர் கபில்!

எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு: திமுகவுக்கு தாவும் நிலோபர் கபில்!



அதிமுகவில் இருந்து இரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிரடியாக நீக்கப்பட்டார். தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் வீரமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் நீக்கப்பட்டதாகவும், திமுகவில் இணைய அவர் நடத்திய பேச்சுவார்த்தையை முன்னரே மோப்பம் பிடித்த எடப்பாடி அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

“எனது தாயும் சகோதரியும் சென்னையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தார்கள். 15 நாளைக்கு முன்னர் எனது தாய் இறந்து விட்டார். இதனை அறிந்த திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் என்னை தொடர்புகொண்டு, என் தாயின் இறப்புக்கு துக்கம் விசாரித்தார். இதனால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னேன். எனது தாயின் இறப்புக்கு திமுகவினர் துக்கம் விசாரித்தனரே தவிர அதிமுகவினர் விசாரிக்கவில்லை. ஜெயலலிதா கொடுத்த அமைச்சர் பதவியில் இருந்தபோதில் இருந்து இப்போது வரை அதிமுகவில் எனக்கு மதிப்பில்லை” என்று நிலோபர் கபில் விளக்கம் அளித்துள்ளார்.



அத்துடன், என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ள நிலோபர் கபில், எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி உண்மையை வெளிக் கொணர்வேன். அவர் தனது சொந்த லாபத்திற்காக பெற்ற பணத்தை எல்லாம் நான் பெற்றதாக பொய் கூறியுள்ளார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல் புகார் தான் என்னை நீக்கியதற்கு காரணம் என்று கூறினால் பல முன்னாள் அமைச்சர்கள் மீது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். அப்படி என்றால் ஊழல் புகார் எழுந்த அமைச்சர்கள் அனைவரையும் நீக்குவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள நிலோபர் கபில், ஏன் முன்னாள் முதல்வர்

எடப்பாடி பழனிசாமி மீதும் கூட ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தொண்டாற்ற நான் நினைக்கிறேன். திமுகவில் இணைவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து உங்களுக்கு தெரிவிப்பேன் என்றும் நிலோபர் கபில் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை பார்க்கும் போது, கண்டிப்பாக அவர் திமுகவில் இணைவார் என்றே கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad