திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டம்: பெரும் பதற்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, May 24, 2021

திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டம்: பெரும் பதற்றம்!

திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் தொடர் போராட்டம்: பெரும் பதற்றம்!


திருச்சி மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.

இதில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, ஹங்கேரி, பங்களாதேஷ், சூடான், நைஜீரியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 109 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 78 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர். தமிழக முதலமைச்சர் தலையிட்டுப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

அதேபோல் சிலர் வழக்கு முடித்து வைக்கப்பட்டவர்கள், பிணையில் வந்தவர்கள் என அனைவரையும் கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்த சிறப்பு முகாமில் உள்ள 40பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது தொற்றிலிருந்து மீண்ட நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் வட்டாட்சியர் விஸ்வநாதன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad