முதல்முறை இப்படியொரு நல்ல செய்தி; நிம்மதி பெருமூச்சு விடும் மும்பை மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

முதல்முறை இப்படியொரு நல்ல செய்தி; நிம்மதி பெருமூச்சு விடும் மும்பை மக்கள்!

முதல்முறை இப்படியொரு நல்ல செய்தி; நிம்மதி பெருமூச்சு விடும் மும்பை மக்கள்!


கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் உச்சத்தில் இருக்கிறது. நேற்று ஒரேநாளில் இங்கு புதிதாக 39,923 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்ச் 31ஆம் தேதியில் இருந்து முதல்முறை 40 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நேற்று 695 பேர் பலியாகியுள்ளனர். இது முந்தைய நாளை (850) விட 20 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் மும்பையில் தொடர்ந்து 2வது நாளாக புதிய பாதிப்புகள் 2,000க்கும் கீழாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று புதிதாக 1,660 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 63 நாட்களில் இல்லாத மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். முன்னதாக மார்ச் 12ஆம் தேதி 1,647 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்று 62ஆக இருந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த பாதிப்பு 53 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 79,552ஆக இருக்கிறது. இதில் மும்பையில் மட்டும் 6.8 லட்சம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகள் 14,102ஆக உள்ளது. மும்பையில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செவன்ஹில்ஸ் மருத்துவமனை டீன் டாக்டர் பால்கிருஷ்ணா அத்சுல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad