குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 6, 2021

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்

குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம்


காய்ச்சல் வருவது சாதாரண விஷயம் தான், இருப்பினும் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு காய்ச்சல் வந்து விட்டதே இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று மிகவும் குழம்பி தவிர்ப்பார்கள். இனி கவலை வேண்டாம் குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

நெற்றியில் ஈரத்துணி :
குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம், குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும்.
உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.

தாய்ப்பால்:
 குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக தாய்ப்பாலே சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது திரவ உணவுகளை கொடுக்க வேண்டும். அதுவும் 0-6 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. 6 மாத மேற்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன், சுத்தமான தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை கொடுக்கலாம்.

 வெங்காயம்:
குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமாக பாட்டி வைத்தியம் அதாவது வெங்காயத்தை நறுக்கி, அதனை குழந்தையின் உள்ளங்காலில் இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

இந்த முறையினை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Post Top Ad