பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 9, 2021

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது?

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று (மே 10) ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. மே மாதம் ஆன்லைன் வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினால் மட்டுமே பதினொன்றாம் வகுப்புக்கான குரூப்பை தேர்வு செய்ய முடியும்.

கடந்த கல்வி ஆண்டில் இதேபோல் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள், வருகைப்பதிவேடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால் இம்முறை அவ்வாறு தேர்வுகள் நடைபெறாததால் மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் சிக்கல் நிலவுகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளைப் பெற குழு ஒன்று அமைக்கப்படுபதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மட்டும் நடைபெற்றுள்ள நிலையில் பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் ஜூலை மாதம் தேர்வை நடத்தலாம் என்றும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலேயே தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கல்வியலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த சூழ்ந்லையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இதுகுறித்த முக்கிய முடிவெடுக்க உள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad