கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
கொரோனா இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலைக்கு தயாராகும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்துக்கு புதிய திட்டத்தை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் அலையை சந்திக்க நாடு தழுவிய திட்டத்தை தயாரிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பதற்றம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக தனி ஆக்சிஜன் இருப்பை உருவாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை படுக்கை எண்ணிக்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபார்முலா மாற்றப்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்குவதற்கு முன்பாகவே ஆக்சிஜன் ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment