அமைச்சர்கள் மானத்தைக் காப்பாற்றிய செல்லூர் ராஜு: சின்னம்மாளுக்கு குவிந்த ஓட்டுகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

அமைச்சர்கள் மானத்தைக் காப்பாற்றிய செல்லூர் ராஜு: சின்னம்மாளுக்கு குவிந்த ஓட்டுகள்

அமைச்சர்கள் மானத்தைக் காப்பாற்றிய செல்லூர் ராஜு: சின்னம்மாளுக்கு குவிந்த ஓட்டுகள்


அதிமுக அமைச்சர்களின் உண்மையான செல்வாக்கு தேர்தல் முடிவுகள் மூலம் வெளியாகி வந்த நிலையில் மதுரை மேற்குத் தொகுதியில் தனக்கு இப்போதும் செல்வாக்கு நல்லப்படியாக உள்ளது என்பதை செல்லூர் ராஜு உறுதிப்படுத்தியுள்ளார்.
மாநிலத்தில் தேர்தல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு எனக் கருத்துக் கணிப்புகள் கூறிவந்தபோதும் முடிவுகள் கொடுத்துள்ள வித்தியாசம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


குறிப்பாக அதிமுக பெற்றுள்ள தோல்வி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் அதிமுகவின் அமைச்சர்கள் பலர் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்த சூழலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள செல்லூர் ராஜுவின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் செல்லூர் ராஜு கைதான் ஓங்கியிருந்தது. அதிக வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

எம்ஜிஆர் கெட்டப்பில் அஜித்... மதுரையை கலக்கும் 'தல' பர்த் டே போஸ்டர்!

இந்த சூழலில் இப்போது நிலவரப்படி செல்லூர் ராஜு 83 ஆயிரத்து 883 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக திமுகவின் சின்னம்மாள் 74 ஆயிரத்து 762 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் 9 ஆயிரத்து 121 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இதனால் செல்லூர் ராஜு வெற்றி உறுதியாகிவிட்டது எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad