ஸ்டாலின் வீட்டுக்கு படையெடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

ஸ்டாலின் வீட்டுக்கு படையெடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

ஸ்டாலின் வீட்டுக்கு படையெடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!


தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், நண்பகல் முதல் நிலைமை தலைகீழாக மாறியது. வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 156 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. சில தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

முழுமையான முடிவுகள் இன்னும் வரா விட்டாலும் திமுக ஆட்சியமைக்கப் போவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி தொடங்கி மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், அரசு மூத்த அதிகாரிகள் என அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகள் பலரும் சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad