தமிழகத்தின் 4 இடங்களில் மலர்ந்த தாமரை; புதிய வரலாறு படைத்த பாஜக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 2, 2021

தமிழகத்தின் 4 இடங்களில் மலர்ந்த தாமரை; புதிய வரலாறு படைத்த பாஜக!

தமிழகத்தின் 4 இடங்களில் மலர்ந்த தாமரை; புதிய வரலாறு படைத்த பாஜக!


தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. பிற்பகலுக்குள் யார் பெரும்பான்மை பெறுவார் என்ற தகவல்கள் கிடைத்தன. அதன்படி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. பல்வேறு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாத நிலையில், இன்று காலை நிலவரப்படி திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவின் வெற்றி பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏனெனில் 20 ஆண்டுகளாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,

மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். மொத்தம் 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில் நான்கு இடங்களில் வென்றது சாதனையாக பார்க்கப்படுகிறது. இது திராவிட மண். இந்துத்துவா சக்திகளுக்கு இடமில்லை. அதுவும் பாஜக ஒருபோதும் ஜெயிக்காது. தாமரை மலராது என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.

இந்த வெற்றி தமிழகத்தில் பாஜகவிற்கும் சிறப்பான எதிர்காலம் இருப்பதையே காட்டுகிறது. இதனை தமிழக பாஜகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஸ்டார் வேட்பாளர்களாக கருதப்பட்ட எல்.முருகன், கே.அண்ணாமலை, குஷ்பு, வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் தோல்வியை தழுவினர். தமிழகத்தில் 1996ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜகவின் வேலாயுதம் வெற்றி பெற்று முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றார்.

இதையடுத்து 2001ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பிடித்த பாஜக 4 தொகுதிகளில் வென்றது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில் பாஜக எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை. தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்குள் செல்லும் வாய்ப்பை பாஜகவினர் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad