தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு; பொதுமக்கள் இப்படியொரு புகார்!
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் திமுக அமர்ந்துவிட்டது. இதையடுத்து ஐந்து கோப்புகளில் தனது முதல் கையெழுத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இட்டுள்ளார். அதில் ஆவின் பால் விலை ஒரு லிட்டர் 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் அடங்கும். இது மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆவின் பால் விலை குறைப்பு நடவடிக்கை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
* நீலநிற பால் பாக்கெட் - ரூ.40/ஒரு லிட்டர்
* நீலநிற பால் பாக்கெட் - ரூ.20/அரை லிட்டர்
* பச்சைநிற பால் பாக்கெட் - ரூ.22/அரை லிட்டர்
* ஆரஞ்சுநிற பால் பாக்கெட் - ரூ.24/அரை லிட்டர்
* இளஞ்சிவப்புநிற பால் பாக்கெட் - ரூ.18.50/அரை லிட்டர்
* டீமேட் பால் - ரூ.57/லிட்டர்
அதுவே பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு,
* நீலநிற பால் பாக்கெட் - ரூ.37/ஒரு லிட்டர்
* நீலநிற பால் பாக்கெட் - ரூ.18.50/அரை லிட்டர்
* பச்சைநிற பால் பாக்கெட் - ரூ.21/அரை லிட்டர்
* ஆரஞ்சுநிற பால் பாக்கெட் - ரூ.23/அரை லிட்டர்
* இளஞ்சிவப்புநிற பால் பாக்கெட் - ரூ.18/அரை லிட்டர்
இதன்மூலம் ஆண்டிற்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சில ஆவின் பால் விற்பனை கடைகளில் விலை குறைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு என்று தான் அரசு தெரிவித்துள்ளது. அரை லிட்டருக்கு ரூ.1.50 குறைப்பு என்று சொல்லவில்லை என்று
கடைக்காரர்கள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment