கொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 4, 2021

கொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்!

கொரோனா தடுப்பூசிகள் கொத்தாக திருட்டு: மதுரை மருத்துவமனையில் துணிகரம்!


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்கு முக்கியமான சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் கொரோனா தடுப்பு மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. நமக்குக் கிடைத்த தகவல்படி இந்த திருட்டு சம்பவம் நெற்று இரவு நடந்துள்ளது.

இது தொடர்பாகப் போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து திருட்டுப் போன இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்போதைய நேரத்தில் நாட்டில் விலை மதிப்பில்லாத பொருளாக விளங்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச் சந்தையில் ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad