இஸ்ரேல் தாக்குதல்.. குழந்தைகள் பரிதாபமாக பலி!
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏற்கெனவே பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள். மோதலை நிறுத்திக்கொள்ள இருதரப்புகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் கொடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களின் விளைவாக மீண்டும் மோதல் எழுந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் சண்டைகளும், கலவரங்களும் நிகழ்ந்துள்ளன. மேற்கு கரையில் பாலஸ்தீன் தரப்பில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment