புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 27, 2021

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்...

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்...


புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை குறித்து இணையவழியில் நடைபெறவுள்ள பயிலரங்கத்தில் பங்கேற்கவுள்ள பேராசிரியா்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

தேசிய அளவில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை (என்ஐஎஸ்பி) மத்திய கல்வி அமைச்சகம் வகுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் இந்தப் புதிய கொள்கையின் அடிப்படையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது இரு கட்ட பயிலரங்குகள் நிறைவு பெற்றுள்ளன. அதில் 1,980 பேருக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசியக் கொள்கை சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்களை புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட செய்வதற்கான வழிகாட்டுதல்கள், மாணவ தொழில்முனைவோரை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
இந்தநிலையில் தற்போது இறுதிக் கட்டப் பயிலரங்கம் இணையவழியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள தகுதியுள்ள பேராசிரியா்களின் விவரங்களை  இணையதளத்தில் மே 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியா்களுக்கு ஜூன்-ஜூலை மாதங்களில் பயிலரங்குகள் இணையவழியில் நடைபெறும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கை குறித்து ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்  இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Post Top Ad