ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கம் மட்டுமே தற்போது இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் நேற்று இரவு பொது முடக்க கட்டுப்பாட்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி மே 6ஆம் தேதி முதல் காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை மதியம் 12 மணிக்கு வரை மட்டுமே திறந்திருக்கும். அரசு, தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மே 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தபோது திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தபோதே பல்வேறு அதிகாரிகள் சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதனால் அப்போது அந்தப் பகுதி அதிகாரிகளால் நிரம்பி வழிந்தது. அந்த சமயம் ஒரு கையில் பூங்கொத்துடனும் ஒரு கையில் முக்கிய கோப்பு ஒன்றுடனும் என்ட்ரி கொடுத்தார் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.
வாழ்த்து தெரிவித்ததோடு கொரோனா பாதிப்பு நிலவரம், எடுக்கப்படும் நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என அப்போதே ஸ்டாலினிடம் விவரித்துள்ளார். நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ராதாகிருஷ்ணன், பணீந்திர ரெட்டி, ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளனர். பொது முடக்கம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தற்போதைய வழி என உறுதியாக கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment