தமிழகத்தின் கொரோனா தொற்று விவரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் வேகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24,898 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
1,52,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 26,465 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 26,445, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்த வந்த 20 பேர் என 26,465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னையில் ஏற்கனவே 6,678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 6,738 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 124 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனாவால் மேலும் 197 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 44 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 47 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் கொரோனாவால் பலியானார்.
No comments:
Post a Comment