தமிழகத்தில் முழு ஊரடங்கா?, புதிய கட்டுப்பாடுகளா? - இன்று அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிப்பு மிகுந்த பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது முழு ஊரடங்கு விதிக்கலாமா? என போன்றவை விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment