ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேலுமொரு இனிப்பான செய்தி சேலத்திலிருந்து!
பஞ்சாப் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் குட்ஸ் ரயிலில் 2 ஆயிரத்து 600 டன் கோதுமை வந்து இறங்கியுள்ளது. மத்திய அரசு அறிவித்திருந்த கோது ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்படுகிறது. அதனைத் தடுக்க தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கோதுமை கட்டணமின்றி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மத்திய அரசு தொகுப்பு பஞ்சாப் மாநிலத்திலிருந்து சரக்கு ரயிலில் சேலம் வந்திறங்கியது. அதாவது 2 ஆயிரத்து 635 டன் கோதுமை சேலம் ரயில் நிலையத்திலிருந்து, லாரிகளில் ஏற்றப்பட்டு சேலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்துக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.
இங்கிருந்து கோதுமை மூட்டைகள் எடுத்துச்செல்லப்பட்டு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த பணியின்போது இந்திய உணவுக் கழக சேலம் மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment