இந்த தேதியில் உச்சம் தொடும் கொரோனா; தமிழகத்திற்கு ஷாக் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, May 18, 2021

இந்த தேதியில் உச்சம் தொடும் கொரோனா; தமிழகத்திற்கு ஷாக் நியூஸ்!

இந்த தேதியில் உச்சம் தொடும் கொரோனா; தமிழகத்திற்கு ஷாக் நியூஸ்!


தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரண்டு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய பாதிப்புகள் சற்றே குறையத் தொடங்கியிருக்கிறது. கோவிட்-19 தொற்றை கணித ரீதியாக கணக்கிடும் வகையில் சூத்ரா (SUTRA) என்ற மாடலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த ஆண்டு வடிவமைத்தது. இதனை பல்வேறு கணிதவியலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா எப்போது உச்சம் தொடும். பாதிப்புகள் எப்போது குறையும் என கணித ரீதியாக சில தகவல்களைப் பெறலாம். இந்த மாடலின் அடிப்படையில் தமிழ்நாடு, அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இரண்டாவது அலையின் உச்சத்தை இன்னும் தொடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் உச்சம் தொட்டு பாதிப்புகள் குறையும் நிலை வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பிகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்புகள், பாசிடிவ் விகிதம் ஆகியவை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது.

சூத்ரா மாடலின் அடிப்படையில் மே 4ஆம் தேதி ஒட்டுமொத்த நாட்டின் கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டு, அதன்பிறகு தினசரி தொற்று சரியத் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மே 7ஆம் தேதி 4,14,188 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் மே 29 முதல் 31ஆம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சம் தொடும்.

புதுச்சேரியில் மே 19 முதல் 20க்குள் உச்சம் தொடும். நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் உச்சம் தொடவில்லை. அசாம் மாநிலம் வரும் மே 20-21 தேதிகளில் உச்சம் தொடக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad