டெல்டாவுக்கு டவிட்டரில் இடம் கொடுத்த ஸ்டாலின்: கலைஞர் மகன்னா சும்மாவா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

டெல்டாவுக்கு டவிட்டரில் இடம் கொடுத்த ஸ்டாலின்: கலைஞர் மகன்னா சும்மாவா?

டெல்டாவுக்கு டவிட்டரில் இடம் கொடுத்த ஸ்டாலின்: கலைஞர் மகன்னா சும்மாவா?


தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அவர் முதல்வராக பொறுப்பேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்துடன், தான் திராவிட பாசறையை சேர்ந்தவன் என்பதை தனது ட்விட்டர் பக்கத்திலும் திடமாக பதிவிட்டுள்ளார். ஸ்டாலினுடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

முன்னதாக, ஸ்டாலினுடன் அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களின் பட்டியல் வெளியானது. அதில், சுமார் 14 மாவட்டங்களில் இருந்து யாரும் இடம்பெறவில்லை என்றும், குறிப்பாக, திமுகவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டத்தில் இருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

மற்ற மாவட்டங்களை பற்றிய பேச்சுகள் ஆங்காங்கே எழுந்தாலும், டெல்டா பற்றிய பேச்சுகள் அதிகமாக எழுந்தன. அவை இன்றும் தொடர்ந்து வருகின்றன. டெல்டாவின் மையமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 முக்கியமான மாவட்டங்களிலும் ஒரு அமைச்சர் கூட இடம்பெறவில்லை என்பதும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டம் டெல்டா பகுதியை சேர்ந்தது என்பதும் கூடுதல் விமர்சனங்களுக்கு காரணமாக கூறப்பட்டது.



இந்த நிலையில், அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம், டெல்டாவில் இருந்து வந்த ஒருவர்தான் முதல்வராகவே இருக்கிறார் என்று ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார். பொதுவாக, கலைஞர் கருணாநிதியிடம் சில சிறந்த பண்புகளும், ஆற்றலும் இருந்தன. யாருக்காவது வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் கேட்கும் பட்சத்தில் தனது மனதில் இடம் கொடுத்திருக்கிறேன் என்பார் கலைஞர். அதேபோல், கட்சி உனக்கு என்ன செய்தது என்பதை விட, நீ கட்சிக்கு என்ன செய்திருக்கிறாய் என்று நினைக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் கட்சியின் ரத்தநாளங்கள் என்றும் அவர் கூறுவது வழக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad