என்னது இன்னும் ஒரு வருஷம் ஆகுமா? மத்திய அரசு போட்ட கிடுக்குப்பிடி உத்தரவு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை வரை ஏற்பட்டு நிலைமை ஓரளவு சீரடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இரண்டாவது அலை காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தீவிர கட்டுப்பாடுகளால் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தி வந்துள்ளது.
தற்போது வரை மொத்தம் 29,893 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 910 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 271 பேர் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் கொரோனா பரவும் என்று அஞ்சி சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக உலகில் கொரோனா தினசரி பாதிப்பில் உச்சத்தில் இருக்கும் இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலிய வந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஐபிஎல் விளையாட வந்த வீரர்கள் தொடர் திடீரென ரத்தானதால் வேறு நாடுகளின் வழியாக
No comments:
Post a Comment