த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 7, 2021

த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்?

த்ரிஷாவை திருமணம் செய்யப் போகும் அந்த மாப்பிள்ளை யார்?

19 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா கடந்த 4ம் தேதி தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

எத்தனையோ பேர் வாழ்த்தியபோதிலும் த்ரிஷாவின் நெருங்கிய தோழியான நடிகையும், தயாரிப்பாளருமான சார்மியின் வாழ்த்து தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. த்ரிஷா சிங்கிளாக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது தான் என சார்மி தெரிவித்துள்ளார்.

திருமணம் நிச்சயமாகப் போய் தானே சார்மி இப்படி வாழ்த்தியிருக்கிறார். இந்த த்ரிஷா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. மாப்பிள்ளை யாராக இருக்கும் என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

முன்னதாக த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. அதன் பிறகு ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னதாக ராணாவை பிரிந்த பிறகு த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.



அந்த திருமணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்று வருண் மணியன் நிபந்தனை விதித்தது த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்தே அவர் திருமணத்தை நிறுத்தினார்.

கடைசி மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று த்ரிஷா ஆசைப்படுகிறார். த்ரிஷா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

திருமணம் குறித்து த்ரிஷா எதுவும் சொல்லாத வருத்தம் இருந்தாலும் அவரை விரைவில் மணமகளாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad