என்னம்மா கீர்த்தி, இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் கவலை
கீர்த்தி சுரேஷின் பெயரை சொன்னாலே அவர் பூசினாற் போன்று இருந்தது தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகிறது. இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.
ஒல்லியானாலும் கீர்த்தி சுரேஷ் அழகாகவே இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு தான் அவர் ஒல்லிக்குச்சியாக இருப்பது பிடிக்கவில்லை. இந்நிலையில் மரக்கார் அரபிகடலின்டே சிம்ஹம் படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் அக்கா ரேவதியை பாராட்டியிருந்தார் கீர்த்தி.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அழகி, தீயாக இருக்கிறீர்கள், சான்சே இல்லை என்று கீர்த்தியை பாராட்டி கமெண்ட் போட்டுள்ளனர்.
அதே சமயம் மீண்டும் வெயிட் போடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தில் பூசினாற் போன்று மிகவும் அழகாக இருக்கிறீர்கள். தற்போது உங்களை பார்த்தாலே பாவமாக இருக்கிறது. எங்களுக்கு பழைய கீர்த்தியை பார்க்க வேண்டும். என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேமா என தெரிவித்துள்ளனர்.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரசிகர்களின் பேச்சை கேட்பதாக இல்லை கீர்த்தி. மீண்டும் வெயிட் போடுவதில் கீர்த்திக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அவர் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment