12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கக்கூடாது... ஏன் தெரியுமா? - கார்த்தி சிதம்பரம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கக்கூடாது... ஏன் தெரியுமா? - கார்த்தி சிதம்பரம்

12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கக்கூடாது... ஏன் தெரியுமா? - கார்த்தி சிதம்பரம்


கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதென்பது ஆபத்து என கருதி தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 11 வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் மேல்கல்வி படிக்க 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வந்தது.இதனிடையே, மாணவர் உடல் நலன் மற்றும் உயிர் பாதுகாப்பில் ஒரு துளியும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடப்பாண்டு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. பல மாநிலங்களும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்த அரசு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிட குழு அமைத்து பரிந்துரை செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் வரவேற்பை கொடுத்துள்ள நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்ககூடாது என காங்கிரஸ் எம்.பி.

கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து பேசியவர், '' என்னைப் பொறுத்தவரை தேர்வை நடத்தி தேர்வு மதிப்பெண்கள் மூலம் கல்லூரி செல்வது நல்லது. 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தி மதிப்பெண்கள் பெற்றால் தான் கல்லூரிகளில் மேற்கல்வி தொடர முடியும் என்றும் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் மதிப்பெண்களை வழங்கினால் ஏற்ற தாழ்வு ஏற்படும். இதனால் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது'' எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்கக்கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad