ரொம்ப ரிஸ்க் எடுக்காதிங்க.. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் உருக்கமான கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

ரொம்ப ரிஸ்க் எடுக்காதிங்க.. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் உருக்கமான கடிதம்!

ரொம்ப ரிஸ்க் எடுக்காதிங்க.. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் உருக்கமான கடிதம்!


தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக முக்கியம் செலுத்தப்பட்டு வருகிறது. அரசின் செயல்பாடுகளுக்கு எதிர் தரப்பு தலைவர்களும் சிலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிபிஈ கிட் அணிந்துகொண்டு கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது பல தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது

இந்நிலையில், மருத்துவரும், முன்னாள் தமிழக சுகாதார துறை அமைச்சருமான எச்.வி.ஹண்டே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் தந்தை கலைஞர் கருணாநிதிக்கு இதை விட பெரிய பரிசு அளித்துவிட முடியாது.
கோவை மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் சென்று நேரடியாக நோயாளிகளுக்கு ஆறுதல் தெரிவித்த உங்களின் செயல் மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைக்கிறேன். தயவுசெய்து அதீத ரிஸ்க் எடுக்க வேண்டாம். உங்களின் நலன் தமிழ்நாட்டுக்கு மிக மிக முக்கியம். இரவும் பகலுமாக உங்களது திட்டமிட்ட உழைப்பு ஏற்கெனவே இரண்டாம் அலை பெருந்தொற்று சூழலை மாற்றிவிட்டது. தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad