ஓமைகாட், போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி செலவில் வீடு கட்டுகிறாரா தனுஷ்?
தனுஷ் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறுவது என்று முடிவு செய்தார். பேரன்களுடன் நேரம் செலவிட விரும்பிய ரஜினியின் ஆசையை ஏற்று போயஸ் கார்டனில் ரஜினி வீட்டிற்கு அருகிலேயே நிலம் வாங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி காலை பூமி பூஜை நடந்தது. பூஜையில் தனுஷ், ஐஸ்வர்யா, ரஜினி, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பூஜையை போட்ட கையோடு தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் தனுஷ். இந்நிலையில் தனுஷின் வீடு பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
4 மாடிகள் கொண்ட அந்த வீட்டை கட்ட தனுஷ் ரூ. 150 கோடி செலவு செய்வதாக கூறப்படுகிறது. 19 ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டப்பட்டு வருகிறதாம். ரூ. 150 கோடியா என்று பலரும் வியக்கிறார்கள்
No comments:
Post a Comment