தங்கம் விலை: ரேட் பாத்துட்டு நகை வாங்குங்க!
சமீப காலமாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படவே இல்லை. ஓரிரு நாட்களில் சிறிய அளவில் விலைச் சரிவு இருந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்படுகிறது. ஆனாலும் சற்று ஆறுதலாகத் தங்கம் விலை நேற்று கணிசமாகக் குறைக்கப்பட்டது.
சென்னையில் இன்று (ஜூன் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,445 ஆகக் குறைந்துள்ளது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,450 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 35,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 35,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
No comments:
Post a Comment