தமிழ்நாட்டில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 10, 2021

தமிழ்நாட்டில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாட்டில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று..!


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,08,838 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 1,88,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1223 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 522052 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 502184 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7658 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 2236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 197601 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 174759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1658 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 676 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 149431 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 142029 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2168 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,124 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,65,67,897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 32,049 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 20,91,646 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 358 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad